கனடாவில் உள்ள ராக்கீஸ் மலைத்தொடர் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மூன்று மலையேறும்  வீரர்கள்  உயிரிழந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்பனிசரிவில் சிக்கி புகழ்பெற்ற ஆஸ்திரியாவை சேர்ந்த மலை ஏறும்  வீரர் டேவிட் லாமா, ஹன்சோர்க் ஆவர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மலை ஏறும்  வீரர் ஆல்பி ஜெஸ் ரொஸ்கெல்லி ஆகியோரே உயிரிழந்துள்ளார்கள் என நம்பப்படுகின்றது.

இவர்கள் ஏறிய மலை பகுதியான ஆல்பர்ட்டாவிலுள்ள பான்ஃப் தேசியப் பூங்காவில் ஒரு தொடர்ச்சியாக பனிச்சரிவு ஏற்பட்டு வந்துள்ளது.

பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை தேடும் பணியில் விமானம் மூலம் சென்று ஆய்வு செய்த தேசிய பூங்கா ஊழியர்கள், பனிப்புயல் மற்றும் அதில் சிக்கி விடப்பட்டிருந்த சில மலையேறும் உபகரணங்கள் இருக்கும் ஆதாரங்களை அவதானித்துள்ளனர.

மோசமான காலநிலை காரணமாக மீட்பு பணிகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.