மழையுடனான வானிலை 

By Daya

19 Apr, 2019 | 09:47 AM
image

தற்போது நிலவுகின்ற மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும்  என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இந்த காலப்பகுதியில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்வதுடன், இடி மின்னல் தாக்கமும் அதிகமாக இருக்கிறது.

இந்தநிலையில் பொதுமக்கள் இடிமின்னலில் இருந்து பாதுகாப்பை பெறுவதற்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்றும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழைப் பெய்யும்.

குறிப்பாக சப்ரகமுவ,மத்திய, தென், ஊவா, மேல், வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் கடுமையான மழைப் பெய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right