கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி 

Published By: Digital Desk 4

18 Apr, 2019 | 08:17 PM
image

கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி நாட்டின் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன வாழ்த்து செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த செய்தியில்,

கிறிஸ்தவ பக்தர்கள் இயேசுபிரானின் மரணத்தையும் உயிர்த்தெழுதல் எனும் மரணத்திலிருந்து மீளெழுதலையும் நினைந்துகூர்ந்து அனுஸ்டிக்கும் உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

இயேசுபிரான் மரணத்தை வெற்றிகொண்டு உயிர்த்தெழுந்ததை உயிர்த்த ஞாயிறு தினமாக மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அனுஸ்டிக்கும் அதேவேளைஇ  இத்தினத்திற்கு முன்னரான 40 நாட்களை தவக்காலமாக கழிக்கும் கிறிஸ்தவ பக்தர்கள் இதன்போது உபவாசமிருந்து சுய தியாகத்தின் மூலம் மத அனுஸ்டானங்களில் ஈடுபட்டு மத கோட்பாடுகளை பின்பற்றுகின்றனர்.

இயேசுபிரான் மானிட இனத்தின் மேம்பாட்டிற்காக அனுபவித்த வேதனைகளையும் மேற்கொண்ட உயிர்த் தியாகத்தையும் நினைவுகூரும் கிறிஸ்தவர்கள் மானிட சமூகத்திற்கு எதிராக எழும்  ன்முறைகள்இ அழுத்தங்கள் ஆகியவற்றை எதிர்க்க கற்றுக் கொள்வதோடுஇ பரஸ்பரம் ஒன்றுக்கொன்று எதிராக ஏந்தப்படும் ஆயுதங்களின் குரூரரத்தன்மையையும் கொடூரத்தையும் இனங்கண்டு கொள்கின்றனர்.

சகலவித இம்சைகளும் தொந்தரவுகளும் அற்ற அமைதியான ஒரு இடமாக உலகம் அமைகின்றபோதே அது மனிதர்களின் அமைதியான தங்குமிடமாகின்றது. அதிகாரத்திற்காகவோ, பணத்திற்காகவோ விதைக்கப்படும் இம்சை மனித வாழ்விற்கான சூழலை உருவாக்குவதில்லை என்பது தெட்டத் தெளிவாகுகின்றது.

 இப் பின்னணியில அன்பு, அமைதி. அந்நியோன்ய புரிந்துணர்வுடன் எழுந்து நிற்கும் மானிட சமூகத்தைப் பற்றிய எதிர்பார்ப்புடனேயே உயிர்த்த ஞாயிறு உதயமாகின்றது. அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்கும் அர்த்தபுஸ்டியான அமைதியான உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள், எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19