(எம்.எப்.எம்.பஸீர்)

ஐக்கிய அரபு அமீரகத்தில், பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் பங்கேற்றிருந்த வேளை கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்ப்ட்ட  சிங்கள பாடகர் நதீமல் பெரேராவிடம் சி.ஐ.டி. நேற்று விஷேட விசாரணை ஒன்றினை முன்னெடுத்தது. 

நாடு கடத்தப்ப்ட்ட  நதீமல் பெரேரா கட்டுநாயக்க விமான நிலைய சி.ஐ.டி. விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்ப்ட்டிருந்த போதும், நேற்று மேலதிக விசாரணைகளுக்காக கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்துக்கு அழைக்கப்ப்ட்டுள்ளார். 

 நேற்று முற்பகல் 10.00 மனியளவில் சி.ஐ.டி. க்கு அழைக்கப்ப்ட்ட அவரிடம் சுமார் இரு மணி நேரம் விசாரணைகள் முன்னெடுக்கப்ப்ட்ட பின்னர் வக்கு மூலம்  பதிவு செய்யப்ப்ட்டுள்ளது.

 அதன் பின்னர் அவர் விடுவிக்கப்ப்ட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.