(எம்.எப்.எம்.பஸீர்)

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் வைத்து பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் கலந்துகொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட  நிலையில் டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இருவரை  டுபாய் இன்று நாடு கடத்தியது. 

தெமட்டகொடையைச் சேர்ந்த 50 வயதான பியல் புஷ்பகுமார மற்றும் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த கஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகனான 22 வயதான மொஹமட் அப்ரிடி மொஹமட் இன்ஹாம் ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.  

இன்று அதிகாலை 5.50 மணியளவில் டுபாயிலிருந்து வந்த யூ.எல்.226 எனும் விமானத்தில் இவர்கள் நாடுகடத்தப்ப்ட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அந்த இருவரையும் சி.ஐ.டி.யினர்  பொறுப்பேற்று விசாரித்து வருகின்றனர்.  இந் நிலையில் இதுவரை டுபாயில் கைது செய்யப்ப்ட்ட மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 31 பேரில் 23 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

 இதனிடையே நேற்று  நாடு கடத்தப்ப்ட்ட 6 பேரில் நால்வர் விமான நிலைய சி.ஐ.டி. விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.   எனினும் மாகந்துரே மதூஷுக்கு நீர் கொழும்பு நிதி நிறுவன கொள்ளை தொடர்பிலான வழக்கில் பிணை நின்ற, மதூஷின் உறவு முறை சகோதரரான  திலான் ரொமேஷ் சமரசிங்க இன்று  சி.ஐ.டி.யினரால் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்பட்டார். 

இதன்போது அவரை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தர்விட்ட நிலையில்,  அன்றைய தினம்  அவரை வேன் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ச் எய்யவும் உத்தர்விடப்ப்ட்டது.

அத்துடன்  நேற்று  நாடு கடத்தப்பட்டவர்களில் உள்ளடங்கும் முன்னாள் விமானப்படை வீரரான தயான் புத்திம பெரேரா நேற்று  இரவு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்ப்ட்டார். 

இந்நிலையில் அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.