கடல் வளத்தை அழிக்கும் அனல் மின் நிலையம்

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் பயன்படுத்தப்படும் நிலக்கரி கப்பல்களிலிருந்து இறக்கப்படும் போது  கடலில் சிந்தப்படுமானால்  அதன் பாதிப்புகள் கடல் வளத்திற்கு பாரிய அழிவை ஏற்படுத்தி விடும் .

இந்த நிலை இன்று நுரைச்சோலை அனல் மின்நிலையம் காணப்படும் கடல் பகதிற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு கடல் வளம் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையம் வருவதற்கு முன்னர் 500 மீற்றர் தூரத்தில் நல்ல பெரிய மீன்கள் காணப்பட்ட போதிலும் தற்போது சுமார் மூன்று  கிலோமீற்றர் தூரத்தில் மாத்திரமே ஓரளவேனும் மீன்கள் காணப்படுவதாக தாழையடி மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். அதே போன்று  கடலரிப்பு அதிகரித்து வீடுகளை நோக்கி கடல் நீர் வருவதாக  குறிப்பிடுகின்றனர்.

வழமைக்கு மாறான வெப்ப நிலை கடல் நீரில் காணப்படுவதால் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமாக இருந்த கடல் சூழல் தற்போது முழமையாக இங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் இங்கிருந்து வெளியாகும் கழிவு நீர் கடல் நீரில் கலக்கப்படும் போது செழிப்பான கொட்டியாரக் குடாவின் மீன்பிடி பாதிக்கப்படப் போகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான  மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். இப்பகுதியில் இறால், நண்டு மற்றும் கணவாய் போன்ற கடலுயிரினங்கள் அதிகளவில்  காணப்படுகின்றன.