தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே காரில் பயணம் செய்த இரண்டு பிரபல தெலுங்கு நடிகைகள் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் பொலிவூட் திரையுலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பு முடிந்ததும் கார் ஒன்றில் ஐதராபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். 

இதன்போது திடீரென எதிர்பாராத விதமாக கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் நடிகை பார்கவி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நடிகை அனுஷா ரெட்டி சிகிச்சையின் பலனின்றி மரணமடைந்துள்ளார்.