(நா.தினுஷா) 

தொகுதிகளின் எல்லை நிர்ணயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீரத்துக்கொண்டு அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை மிக விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். 

ஆனால் ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்த ஐக்கிய தேசிய கட்சி முயற்சிக்க வில்லை. ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தீர்மானித்தால் மாத்திரமே தேர்தலை விரைவாக நடத்த முடியுமென்றும் அவர் சுட்டிகாட்டியள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, 

உரிய காலத்துக்கு முன்பாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது. அவ்வாறு ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருவதற்கு முன்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே உள்ளது.

மாகாண சபைகளுக்கான தேர்தலும் மிக விரைவாக நடத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்றே எமது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 

எவ்வாறாயினும்  ஜனாதிபதி தேர்தலே முக்கியமான தேர்தலாக காணப்படுவதுடன் உடனடியாக நடத்தவேண்டிய தேர்தலாகவும் இருக்கிறது.எனத் தெரிவித்தார்.