வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறு குளங்களிற்கு  ஆறு இலட்சத்து 42ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின். பொறுப்பதிகாரி யோ. நிசாந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள குளங்களுக்கு மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதா என இன்று வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்தவருடம் முதல் இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் வரை வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறு குளங்களில் குறித்த மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. 

இவை வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்களிற்கே குறித்த மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதுடன் அவற்றில் 46 குளங்களிற்கு நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையினது நிதியும் ஒரு குளத்திற்கு மீனவசங்கத்தினது நிதி உதவியில் கொள்வனவு செய்யப்பட்டு குளங்களில் விடப்பட்டுள்ளன.16இலட்சம் ரூபாய் செலவில் விடப்பட்டுள்ளதாக  அவர்  மேலும் தெரிவித்தார்.