உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பெரும் பாதிப்பை விளைவிக்கும் ; மக்கள் போராட்ட மத்திய நிலையம்

Published By: Digital Desk 4

18 Apr, 2019 | 04:21 PM
image

( செ. தேன்மொழி )

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் உள்ள பெருவாரியான ஏற்பாடுகள் மக்களின் ஜனநாயக உரிமைக்கும், குடியியல் சுதந்திரங்களுக்குக் பெரும் பாதிப்பை விளைவிக்க கூடியன என மக்கள் போராட்ட மத்திய நிலையம் கூறியுள்ளது.

அந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும் பட்சத்தில் அதை தோற்கடிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றது.

இன்று வியாழக்கிழமை இராஜகிரியவில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் முன்னிலை சோசலிச கட்சியின் முக்கியஸ்தர் புபுது ஜயகொட ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் போது கூறியதாவது,

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கவேண்டும் அதற்கு பதிலாக அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தையும் நீக்க வேண்டும் என்பதே எமது கருத்து. இந்த சட்டமூலத்தை எதிர்த்து நாங்கள் பல போராட்டங்களை மேற்கொண்டோம் . ஆனால் சட்ட மூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

 இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் அதனை எதிர்த்து வாக்களிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

நாங்கள் இந்த சட்ட மூலம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றோம். மேலும் எதிர்கட்சிகள் இந்த சட்டமூலத்திற்கு எதிரான அபிப்ராயத்தையே கொண்டிருக்கின்றன. என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரும் இந்த சட்மூலத்திற்கு எதிரான கருத்துக்களையே கொண்டிருக்கின்றது. இவர்களுடான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஜக்கிய தேசிய கட்சியினருடனும் இது தொடர்பில் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58