(எம்.ஆர்.எம்.வஸீம்)

பாராளுமன்றத்தை பிழையாக வழிநடத்தி வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் எடுத்துரைக்கும் போது அதற்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இடையூறுகளை ஏற்படுத்தியதன் மூலம் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பந்துள குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக சபாநாயகர் கருஜயசூரியவுக்கு இன்று  எழுத்து மூலமான முறைப்பாட்டை கையளித்தபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்துக்கு பொய்யான அறிக்கைகளை சமர்ப்பித்ததே முன்வைக்கப்பட்டிருக்கின்றது. வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பிக்கப்பட்டு 4தினங்களுக்குள் நிதிக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்திக்கு சமர்ப்பித்திருக்கவேண்டும். 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் சிறப்புரிமை சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்கவின் நடவடிக்கை சிறப்புரிமையை மீறும் செயலாகும். அதனால்  இதுதொடர்பாக பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு தெரியப்படுத்தவும் அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்துக்கு அறிவிக்கவும் இருப்பதால், சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பாக பாராளுமன்றத்தில் தெரிவிக்க அனுமதிக்குமாறு தெரிவித்து சபாநாயகர் கருஜயசூரியவுக்கு சமர்ப்பிக்குமாறு  பாராளுமன்ற செயலாளரிடம் முறைப்பாட்டு கடிதத்தை கையளித்தேன் என்றார்.