உலகக் கிண்ணம் : இலங்கை அணி விபரம் வெளியானது !

Published By: Digital Desk 3

18 Apr, 2019 | 03:18 PM
image

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும்  15 பேரடங்கிய இலங்கை அணி வீரர்களின் பெயர்  பட்டியல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

12 ஆவது உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம்14 ஆம் வரை இடம்பெறவுள்ளது.

இதில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதோஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியதீவுகள் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

இலங்கை குழாமை திமுத்து கருணாரத்ன வழிநடத்துகின்றார். அவருடன் அஞ்சலோ மெத்தியூஸ், லசித் மாலிங்க, குசல் ஜனித் பெரேரா, லகிரு திரிமன்னே, அவிஸ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, ஜெப்ரி வெண்டர்சா, திசர பெரேரா, இசுறு உதான, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், ஜீவன் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன ஆகியோர் இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, அகில தனஞ்சய உள்ளிட்டவர்கள் அணியில் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41