திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பெண்கள் மாத்திரம் பணியாற்றும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது
சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் காலை 11 மணி நிலைவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தநிலையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பெண்கள் மாத்திரம் பணியாற்றும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அங்கேரி பாளையத்தில் உள்ள மேல்நிலைப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பெண் அலுவலர்கள் மாத்திரமே பணியில் உள்ளனர்.