இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில்  சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு, வாக்களிக்க  ஏராளமான பொதுமக்கள்,நடிகர்கள் உட்பட பலர் சென்று தனது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இல்லாததால், வாக்குச்சாவடிக்கு சென்று விட்டு வாக்களிக்க முடியாத நிலையில் அங்கிருந்து சென்று விட்டனர்.

 இறுதியாக தான் வாக்களித்ததாக சிவகார்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.