சென்னையில்  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிகாரிகளுடன் நீண்ட நேரம் வாக்குவாததத்தில் ஈடுபட்டவர் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.  

தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். தமிழகத்தில் காலை 11 மணி நிலைவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில் சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பெண் வாக்காளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டையில் சிசிலி மோரல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிகாரிகளுடன் நீண்ட நேரம் வாக்குவாததத்தில் ஈடுபட்டவர் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.