தாய்வானில் இன்று அந்நாட்டு நேரடிப்படி மதியம் 1 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தலைநகர் தாய்பே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

இந்நிலநடுக்கம் 6.1 ரிச்டர் அளவில் ஹுயாலியன் நகரில் இருந்து 19 கி.மீ. தூரத்தில் பூமிக்கு அடியில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு ஹுயாலியன் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 17 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.