உலகளாவிய ரீதியில் நடைபெறும் 16 ஆவது உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டினை இம்முறை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் சர்வதேச வர்த்தக மையம் என்பன இணைந்து “வெற்றிக்கான வர்த்தகம் : இணைப்பு, போட்டி, மாற்றம்” என்ற தலைப்பின் கீழ் இம் மாநாட்டினை நடத்த உத்தேசித்துள்ளனர். 

சர்வதேச வர்த்தகம் தொடர்பில் இந்நாட்டில் காணப்படும் திறந்த தன்மையினையும் அதற்காக காணப்படும் உகந்த சூழலினையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இம்மாநாடு வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.