மங்காத்தா மூலம் நடிகராக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் மஹத். இவருக்கும், இவருடைய நீண்ட நாள் காதலியான பிராச்சி மிஸ்ராவுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நடிகர் சிம்புவின் தோழனாக தன்னை முன்நிறுத்திக் கொள்ளும் நடிகர் மஹத், சிம்பு நடித்த ‘வந்தா ராஜா தான் வருவேன்’ என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சிம்புவின் ஆலோசனையின் பேரில் ‘பிக் பொஸ் தொடர் 2’ இல் பங்குபற்றினார். 

அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய மற்றொரு நடிகையான யாஷிகா ஆனந்த் மீது காதல் வயப்பட்டார் மஹத். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், மீண்டும் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பிராச்சியிடம் பேச்சு வார்த்தை நடத்தி காதலை வளர்த்தார். 

பிறகு திடீரென இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. இதனிடையே பிராச்சி மிஸ்ரா முன்னாள் இந்திய அழகி போட்டியில் பங்குபற்றியர் என்பதும், டுபாயில் வாழும் இளம் தொழிலதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.