வற்வரி தொடர்பாக தற்போது நிலவிவரும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  ஐ.தே.க. வின் அமைச்சர்கள், உப அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற வற்வரி அதிகரிப்பு தொடர்பான கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு கருத்துக்களை ஆராய்ந்து கலந்து ஆலோசனை செய்து முடிவுகளை விரைவில் வெளியிடவுள்ளார்.

இது தொடர்பில் எவ்வாறான கருத்துக்களை ஐ.தே.கட்சியின் உறுப்பினர்கள்  ஊடகங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதனையும் அவர் தெளிவுபடுத்தினார்.

 

இதேவேளை, மே தினத்தன்று கெம்பல்பாகில் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்திற்கு அனைத்து அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது தொகுதிகளில் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.