கிளிநொச்சி மாவட்டத்தில் படைப்புழுத்தாக்கம் காரணமாக அழிவடைந்த சோளச்செய்கைக்கான இழப்பீடுஎதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோளச்செய்கையில் ஏற்பட்டபடைப்புழுதாக்கம் காரணமாக சோளச்செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளது.

இவ்வாறு மாவட்டத்தில் ஏற்பட்ட அழிவுதொடர்பில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதாவது, படைப்புழுவின் தாக்கம் ஏற்பட்டிருப்பின் அவைமுழுமையான அழிவாகவே கருதமுடியும் என்றும் அதில் பகுதியளவு மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் இதற்கான காப்புறுதிகட்டாயமில்லை எனவும் மாகாண விவசாயத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் படைப்புழுவின் தாக்கத்தினால் அழிவடைந்த சோளப்பயிர்ச் செய்கைகளுக்கு எந்தவிதமான இழப்பீடுகளும் இதுவரை வழங்கப்படவில்லை.

அதாவது கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம், பச்சிலைப்பள்ளி, கரைச்சி ஆகியபகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 80 ஏக்கர் வரையானசோளச் செய்கை படைப்புழுத்தாக்கத்தினால் அழிவடைந்துள்ளன.

திணைக்கள ரீதியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் இதுவரை எந்தவிதமான இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.