மன்னார்- மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வண்ணாங்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று புதன் கிழமை மாலை இடி மின்னல் தாக்கியதில் குறித்த வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

குறித்த சம்பவம் இடம் பெற்ற போது வீட்டில் யாரும் இல்லாததினால் உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.

குறித்த வீட்டில் உள்ள தென்னை மரங்களை தாக்கிய இடி மின்னல்,வீட்டையும் தாக்கியுள்ளது.

இதன் போது வீடு முழுமையாக எறிந்துள்ளதோடு,வீட்டினுள் காணப்பட்ட பல இலட்சம் ரூபாபெறுமதியான மின் சாதனப்பொருட்கள், உடைகள் உட்பட இதரப்பொருட்கள் அனைத்தும் எறிந்து சேதமடைந்துள்ளது. 

வெளியில் சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பிய போது குறித்த சம்பவம் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.