சிலி நாட்டில் வீட்டின் மீது விழுந்து நொருங்கிய விமானம்: 6 பேர் பலி

Published By: Digital Desk 3

18 Apr, 2019 | 11:05 AM
image

சிலி நாட்டில் விமானம் ஒன்று வீட்டின் மீது விழுந்து நொருங்கியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் லோஸ் லாகோஸ் பிராந்தியத்தில் உள்ள பியூர்ட்டோ மோண்ட் என்ற இடத்தில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

இதில் ஒரு விமானியும், 2 பெண்கள் உள்பட 5 பயணிகளும் பயணம் செய்தனர். புறப்பட்டு சென்ற சில நொடிகளில் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

பின்னர் அந்த விமானம் ஒரு வீட்டின் மேல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து, விமானத்தின் எரிபொருள் கசிந்து தீப்பிடித்தது. இதில் விமானம் மற்றும் அந்த வீடு முற்றிலும் எரிந்தது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

விமானம் விழுந்து நொருங்கிய வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரிய அளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக விபத்து நேரிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு...

2026-02-13 09:39:14
news-image

டாசன்ஸ் க்ரீக் நட்சத்திரம் ஜேம்ஸ் வான்...

2026-02-12 16:07:54
news-image

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

2026-02-12 15:18:01
news-image

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10...

2026-02-12 13:55:34
news-image

பங்களாதேஷ் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய...

2026-02-12 12:46:56
news-image

சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு

2026-02-12 12:50:01
news-image

பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல் :...

2026-02-12 12:16:54
news-image

கனடா துப்பாக்கிச் சூடு ; 18...

2026-02-12 12:25:47
news-image

பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக கடற்கரையில்...

2026-02-12 11:51:44
news-image

ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க...

2026-02-12 09:37:30
news-image

அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப்...

2026-02-11 17:09:59
news-image

பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி...

2026-02-11 15:23:56