பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில், தற்போது பெய்துகொண்டிருக்கும் கன மழையை காரணமாக  விமானங்கள் மத்தல விமானநிலையத்தில் தரையிறங்கின.

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில்  தரையிறங்க வேண்டிய ஐந்து விமானங்கள், மத்தல விமான நிலையத்துக்கு தரையிறங்கியது.

இன்று மாலை 4 மணிமுதல் அப்பகுதியில் கடுங்காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகின்றது.

மலேசியா, இந்தோனேஷியா, சிங்கபூர், தோஹா கட்டார் ஆகிய விமான நிலையங்களிலிருந்து வருகைதந்த விமானங்களே இவ்வாறு மத்தலை விமான நிலையத்தில் தரையிறங்கியை குறிப்பிடத்தக்கது.