12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கான அணித் தலைவரை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு செய்துள்ளது.

ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் அணித் தலைவராக திமுத் கருணாரத்னவை தெரிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. 

உலகக் கிண்ண இலங்கை அணியை வழிநடத்த திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டதை விளையாட்டுத்துறை அமைச்சர்  ஹரீன் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.