போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 05 சந்தேக நபர்கள் கிளிநொச்சயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணம் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய கிளிநொச்சி பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களிடமிருந்த 05 மோட்டார் சைக்கிள்களும், 03 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத் தொகையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இவ்வாறு கைது செய்த நபர்களிடம் இருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.