உலகின் மிகப்பெரிய இறக்கை கொண்ட விமானம் தனது ஆரம்பப் பயணத்தை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

அமெரிக்காவின் லொஷ்ஏஞ்சல்ஸில் தயாரிக்கப்பட்ட 6 இயந்திரங்களைக் கொண்ட இந்த விமானம்  காற்பந்து மைதானத்தின் அளவுடைய, அகன்ற இறக்கைகளையும் இரு பயணிகள் தொகுதியும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தின் மோஜாவே விமான மற்றும் விண்வெளி நிலையத்தில் இருந்து செலுத்தப்பட்ட இவ்விமானம் 2 1/2 மணிநேரம் மோஜாவே பாலைவனத்தில் வெற்றிகரமாகத் தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது.

 சுமார் 50 இலட்சம் பவுண்ட்ஸ் எடை கொண்ட இவ்விமானம் 385 அடி அகலம் மற்றும் 238 அடி நீளம் கொண்டதாகும்.

இந்த விமானத்தை ஸ்டிராட்டோலாஞ் என்ற விமானத் தயாரிப்பு நிறுவனம் பல வருடங்களாகத் தயாரித்து வந்துள்ள நிலையிலேயே குறித்த விமானம் தனது பறப்பிற்கான பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

இந்நிறுவனத்தின் ஸ்தாபகர் போல் ஆலென் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை பில்கேட்ஸ் உடன் இணைந்து 1975 இல் ஆரம்பித்தவர் என்பதுடன் கடந்த 2018 ஒக்டோபர் மாதம் போல் ஆலென் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.