வவுனியா நகரசபை மைதானத்தில் மின்சாரம் இன்மையால் விளையாட்டு வீரர்கள் அவதி

By Daya

17 Apr, 2019 | 09:45 AM
image

வவுனியா நகரசபை மைதானத்தில் மாலை நேரங்களில் மின்சாரம் இன்மையால் விளையாட்டு வீரர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபை மைதானத்தை மாலை நேரங்களில் விளையாட்டு வீரர்கள் உட்பட பொதுமக்கள் உடற்பயிற்சிக்காக பயன்படுத்திவரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக மாலை 6.00 மணிக்கு மேல் மைதானம் மின் விளக்குகள் போடப்படாமையினால் இருண்டு காணப்படுவதாக விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர்.

வவுனியா நகரசபையில் நிரந்தரமாக எலற்றீசியன் (மின் இணைப்புக்களை பழுது பார்ப்பவர்) ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ள நிலையில் மைதானம் மற்றும் சில உள்ளக விளையாட்டு அரங்குகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையால் இருளடைந்து காணப்படுவதுடன் மாலை நேரப்பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு வீரர்கள் இருட்டில் தமது பயிற்சிகளை சிரமத்தின் மத்தில் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபை நிர்வாகத்தின் அசமந்த போக்கே இந்நிலைமைக்கு காரணம் என தெரியவருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right