திறைசேரி பிணைமுறி மோசடி; ஜனாதிபதி பிரதமர் கைகளில் சேறு படிந்துள்ளது.!

Published By: Robert

21 Apr, 2016 | 09:06 AM
image

இலங்கை மத்­திய வங்­கியில் இடம்­பெற்ற திறை­சேரி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கைகளில் சேறு படிந்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில குற்றம் சுமத்தினார்.

எமது நாட்டின் வர­லாற்றில் இடம்­பெற்ற பெரி­ய­ள­வான திறை­சேரி மோசடி இடம்­பெற்று 13 மாதங்­க­ளுக்குப் பின்னர் மீண்டும் அர­சா­னது இரண்­ட­ாவது முறை­யா­கவும் பாரிய திறை­சேரி மோச­டியில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யி­னரால் நேற்று புதன்­கி­ழமை பொரளை என்.எம்.பெரேரா கேந்­திர நிலை­யத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே பிவி­துரு ஹெல உறு­ம­யவின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­மன்­பில மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

தொடர்ந்து உரை­யாற்­றிய அவர்,

நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் கடந்த காலங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இலங்கை மத்­திய வங்­கியின் திறை­சேரி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கைகளில் சேறு படிந்­துள் ­ளது.

வர­லாற்று ரீதியில் இவ்­வா­றான மோசடி இடம்­பெற்று 13 மாதங்கள் கடந்த நிலை­யிலும் இது தொடர்பில் உரிய விசா­ர­ணை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில் அர­சா­னது மீண்டும் பாரிய மோச­டி­யொன்றை முன்­னெ­டுத்­துள்­ளது. அதா­வது அரசின் தேவைக்­காக கடந்த மாதம் இலங்கை மத்­திய வங்­கி­யி­ட­மி­ருந்து 10 மில்­லி­யன் கடன் தொகை­யினை கோரி­யி­ருந்த அர­சா­னது மறு­புறம் இதற்கு மாறாக 29 மில்­லியன் ரூபா­வினை 14.2 சத­வீத வட்­டிக்கு பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

இவ்­வா­றான பல்­வேறு மோசடிகள் இலங்கை மத்­திய வங்­கியில் நாளுக்கு நாள் அரங்­கேற்­ற­ப்பட்டு வரு­கின்­ற­மை­யா­னது எமது பொரு­ளா­தார நிலை­பற்றி நாம் அனை­வரும் நன்கு சிந்­தித்து செயற்­பட வேண்டும்.

மத்­திய வங்­கியின் பிணை­முறி மோசடி தொடர்பில் கடந்த காலங்­களில் பல்­வேறு விமர்­ச­னங்கள் இந்த அர­சாங்­கத்­திற்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டன.

இவ்­வா­றான நிலை­யி­லேயே பாரா­ளு­மன்­றத்தை முன்­ன­தாக கலைத்து இந்த விட­யங்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூடிமறைப்­ப­தற்கு முயற்­சி­களை முன்­னெ­டுத்தார். இந்த விட­யத்தில் எவ்­வா­றான தவ­று­களும் இடம்­பெ­ற­வில்லை என அர­சாங்கம் தெரி­விக்­கு­மாயின் கோப் குழுவின் அறிக்­கை­யினை உட­ன­டி­யாக பாரா­ளு­மன் றில் சமர்ப்­பிக்க வேண்டும்.

அர­சாங்­க­மா­னது தற்­போது மத்­திய வங்­கி­யி­ட­மி­ருந்து 14.2 வீத வட்டி அடிப்­ப­டை­யில் கடன்­ பெ­று­கி­றது. இது சாதா­ரண உற்­பத்­தி­யா­ளர்­க­ளையும், வங்கி கடன்­பெ­று­ப­வர்­க­ளை­யுமே பாதிக்கும். கடந்த மார்ச் 29 ஆம் திகதி அதிக வட்டிவீதத்தில் பெற்ற கடனைத் தொடர்ந்து மீண்டும் 31ஆம் திகதி குறைந்த அளவில் பெறுகின்றது. இந்தச் செயற்பாடானது எமது நாட்டில் அரங்கேறிய இரண்டாவது திறைசேறி மோசடி என்றே குறிப்பிட வேண்டும். அந்த வகையில் இது தொடர்பில் விசார ணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமா னது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22