இசைஞானி இளையராஜாவின் இசையில் பின்னணி பாடகர் கே. ஜே.யேசுதாஸ் பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.

விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்து வரும் ‘தமிழரசன்’ என்ற படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை கே. ஜே. யேசுதாஸ் பாடினால் நன்றாக இருக்கும் என படக்குழுவினர் விரும்ப, அதற்கு இசைஞானியும் சம்மதித்து, கே.ஜே.யேசுதாஸ் அழைத்துப் பாடும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். இசைஞானி அழைப்பை ஏற்று கே. ஜே. யேசுதாஸ் ,பத்தாண்டுகளுக்கு, அவரின் இசையில் பாடலை பாடியிருக்கிறார்.

கத்தி, சிகரம் தொடு ஆகிய படங்களில் பாடிய கே. ஜே. யேசுதாஸ், ‘ தமிழரசன்’ படத்திற்காக ‘‘பொறுத்தது போதும் பொங்கிட வா.. புயலென வா...”எனத் தொடங்கும் பாடலை பாடியிருக்கிறார். இதற்கு முன்னர் மம்முட்டி நடித்த மலையாள படமான பழசி ராஜா என்ற படத்தில் இசைஞானி இசையில் கே. ஜே. யேசுதாஸ் பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி நடித்த தாஸ் என்ற படத்தை இயக்கிய இயக்குநர்  பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘தமிழரசன்’ படத்தில், விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன், சோனு சூட், சுரேஷ்கோபி, சங்கீதா, கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.