(நா.தினுஷா)

பல்வேறு காரணங்களுக்கமைவாக உலக நாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இலங்கையர்களுக்கு தேவைப்படின் மீண்டும் இலங்கையில் குடியுரிமை வழங்கி இரட்டை குடியுரிமைக்கான வாய்ப்புகள் காணப்பட்டது.

 ஆனால் இன்று அந்த நிலைமையை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நீக்கப்பட்டது என அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

சுயநலத்திற்காக மற்றவர்களுக்கு வைத்த பொறியில் தான் சிக்கியது போல் இரட்டை குடியுரிமை நெருக்கடியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தற்போது சிக்கிக்கொண்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதுக்குறித்து அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில் ,

பல்வேறு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளின் குடியுரிமையை பெற்று வாழும் பல்லாயிரம் மக்கள் இருக்கின்றனர். 

அவ்வாறு வெளிநாட்டு குடியுரிமையை பெற்றுக்கொண்ட இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாடு சென்றவுடன் தனது தேவைக்காக மீண்டும் நாடு திரும்பும் போது அவரின் இலங்கையர்கள் என்ற வகையில் அவரின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான இரட்டை பிராஜா உரிமைக்கான வாய்ப்புக்களும் கடந்த காலங்களில் காணப்பட்டன.

ஆயினும் கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் கோத்தபாய ராஜபக்ஷவினால் இந்த இரட்டை பிரஜா உரிமை நீக்கப்பட்டது. 

கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவின் பிரஜா உரிமையை பெற்றுக்கொண்ட அதேவேளை இலங்கை பிரஜா உரிமையையும் அனுபவித்தார் என அவர் இதன் போது தெரிவித்தார்.