ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யவதற்காக  திருமலை நோக்கிச்சென்றுள்ளார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் சென்றடைந்துள்ளார்.

அங்கிருந்து கார் மூலம் வீதி மார்க்கமாக திருமலைக்கு சென்ற ஜனாதிபதியை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அணில் குமார் சின்கால், இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு ஆகியோர்  வரவேற்றனர்.

இன்று பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மற்றும் குடும்பத்தினர்  நாளை அதிகாலை சுப்ரபாத சேவையில் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.