மின்சாரத்தடை ஏற்படும் அபாயம் : ஐந்து எல்.என்.ஜீ மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை

Published By: Digital Desk 8

16 Apr, 2019 | 04:01 PM
image

நாட்டில் நிலவிவரும், மின்சார பிரச்சினைக்கு தீர்வு காணும்வகையில் ஐந்து எல்.என்.ஜீ மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதுதொடர்பிலான பேச்சுவார்த்தை பூர்த்தி செய்யபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் மொத்த மின்சார தேவையில் 50 சதவீதமான பகுதியை 2030ம் ஆண்டளவில் புதுபிக்கக் கூடிய வலுசக்தி மூலங்களிருந்து பெற்றுக்கொள்ளஅமைச்சு எதிர்பார்த்துள்ளது இதற்கமைய சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி மிதக்கும் மின் உற்பத்தி நிலையம் மாதுருஓய நீர்த்தேக்கத்தில் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் பத்து மெகாவோட்ஸ் மின்சாரம் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது.

நாட்டின் மின்சார தேவை வருடாந்தம் 200 மெகாவோட்ஸ் வரை அதிகரிக்கிறது. நாட்டின் மின்சார தேவை ஏழு சதவீதத்திலிந்து பத்து சதவீதம் வரை அதிகரிக்கும் என வலுசக்தி நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்தாலும் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்திருக்கும் நீரேந்து பிரதேசங்களில் மழை பெய்யவில்லை என மின்வலு அமைச்சு அறிவித்துள்ளது. நீரேந்து பிரதேசங்களின் நீர் மட்டம் தற்சமயம் 30 சதவீதமாக காணப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் மின்சார தேவை அதிகரித்திருந்தாலும் நீர் மின்நிலையங்களிலிருந்து போதியளவிலான மின்சாரம் வழங்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமை முதல் மின்சார துண்டிப்பு இடைநிறுத்தப்பட்டாலும் மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்ந்தும் சவாலாகவே காணப்படுவதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விளக்கமறியல் உத்தரவுகளால் சிறைகளில் நெரிசல்; மாற்று...

2026-07-13 06:04:37
news-image

காலநிலை மாற்றத்தால் தித்வா புயல் போன்ற...

2026-07-13 05:57:04
news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25