பாகிஸ்தானிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பிரதிநிதிகள் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாஹித் அஹ்மத்தை இன்றையதினம் உயர் ஸ்தானிகராலயத்தில் சந்தித்தனர்.

பாகிஸ்தானிய விமானப்படை அதிகாரி (எயார் கொமடோர் ) முஸ்தபா அன்வரின் வழிநடத்தலின் கீழ் இக்குழுவானது 06 நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ளது.

பாகிஸ்தானிய இராணுவத்தின் மூத்த அதிகாரிகள், பாகிஸ்தானிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் கற்கைகளை தொடரும் ஈரான், பங்களாதேஷ் மற்றும் நேபாள இராணுவ அதிகாரிகள் இக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.

பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் இலங்கை மற்றும் பாகிஸ்தானிற்கிடையிலான இருதரப்பு உறவுகள் தெற்காசியாவில் சமாதானம் மற்றும் ஸ்த்திரத்தன்மையினை உருவாக்குதன் நிமித்தம் பரஸ்பர நம்பிக்கை மற்றும் பொதுவான விருப்பிலேயே தங்கியுள்ளது என கருத்து தெரிவித்தார்.

இக்குழுவானது இலங்கையின் பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதானி, இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் தளபதிகள் போன்ற முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடதக்கது.

மேலும் இக்குழு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான நிலையம் மற்றும் தேசிய பாதுகாப்பு கற்கைளுக்கான நிறுவனம் ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.