( செ. தேன்மொழி )

வரகாகொட , மாவதகம , ருவன்வெல்ல மற்றும் கொலன்ன பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

வரகாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரணை – மதுகம வீதியில் நேற்று இரவு 8 . 30 மணியளவில் முச்சக்கர வண்டியொன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்தக்குள்ளாகியதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளார்.

கரனங்கொட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதேவேளை மாவதமக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்படிபொல – குருணாகலை வீதியில் மாலை 4. 30 மணியளவில் இரு முச்சக்கர வண்டிகள் மோதண்டு ஏற்பட்ட விபத்தில்,ஒரு முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்தள்ளார்.

ஹதரலியத்த பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய  நபர் இவ்வாறு உயிரிழந்தள்ளார்.பொலிஸார் விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதியை கைது செய்துள்ளனர்.

இதேவேளை ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை – கேகாலை வீதியில் மாலை 5 . 20 மணியளவில் முச்சக்கர வண்டி பாதசாரதி ஒருவரின் மீது மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த பாதசாரதி உயிரிழந்துள்ளார்.

தெய்யோவிட்ட பகுசதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் இவ்வாறு உயிரிழந்தள்ளார். விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கொலன்ன பொலிஸ் பிரவிற்குட்பட்ட சூரியகந்த – ஹெம்பிலிபிடிய வீதியில் நேற்று இரவு 8 . 50 மணியளவில் முச்சக்கர வண்டியொன்று சாரதியின் கட்டுபாட்டையிழந்து மின்கம்பம் ஒன்றில் மோதண்டு எற்பட்ட விபத்தில் சாரதியும் , முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொலன்ன பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய மற்றும் 52 வயதுடைய  தம்பதியினர் இருவரே இவ்வாறு உயிரிழந்தள்ளனர்.

விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.