புத்தாண்டை முன்னிட்டு சட்டவிரோதமான முறையில் டுபாயில் இருந்து ஒரு தொகை சிகரெட்டுக்களை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்டபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பெண் உட்பட இருவரை சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் தடுகாரதெனிய - வெல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான பெண்ணிடமிருந்து  43 ஆயித்து 480 ஒரு வகையான சிகரெட்களை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், மற்றைய நபரான மாத்தறை - பாலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதானவரிடமிருந்து 39 ஆயிரத்து 900 மெற்றுமொரு வகையான சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதோடு குறித்த இரு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

சுமார் 41 இலட்சத்து 69 ஆயிரம் ரூபா பெறுமதியான, 83 ஆயிரத்து 380 சிகரெட்டுக்களை குறித்த இரு சந்தேக நபர்களின் பயணப் பொதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.