கல்லுண்டாய் வெளியில் திண்மக்கழிவுகள் கொட்டப்படும் வளாகத்தில் திடீரென்று பிடித்த தீயை தீயணைப்புப் படையினர் அனைக்கமுற்பட்டபோதும் இரு தினங்களாகத்தொடர்து எரிந்த வண்ணமுள்ளது.

இதனால் வளாகம் புகைமண்டலமாகக் காட்சியளிக்கின்றது. இந் நிலை குறித்து சம்பந்தப்பட்டவர்களால் நீதவானின் கவனத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

வலி-தென்மேற்கு பிரதேசத்தில் கல்லுண்டாய் வெளியில் அமைக்கப்பட்டுள்ள திண்மக்கழிவுகள் கொட்டப்படும் வளாகத்தில்நேற்று மாலை 4 மணியளவில் திடீரென்று பற்றிய தீச்சுவாலை பரவலாக எரிந்தது.

இதேவேளை இப்பிரதேசத்தில் யாழ்.மாநகர சபையினரால் தினசரி கொட்டப்படும் திண்மக்கழிவுகளால் சுற்றாடலில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 

இந் நிலை குறித்து சமூக சேவையாளர் மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவழக்கை விசாரணை செய்துவந்த நீதிவான் கடந்த இரு மாதங்களுக்கு முன் வளாகத்தில் நேரில் சென்ற பார்வையிட்டதுடன் திண்மக்கழிவுகள் எரியாத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்றும் அங்கிருந்த மாநகர சபை அதிகாரியிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் நே்றறு  வளாகத்தில் திடீரென்று பற்றி தீ மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருபத்துநான்கு மணி நேரமும் காவலாளி கடமையிலிருக்கம்போது தீ எவ்வாறு என கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.