அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள டெக்சாஸ், அலபாமா, மிச்சிபிசி ஆகிய மாகாணங்களை பலத்த சூறாவளி தாக்கியதில் சிறுவர்கள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.

சுமார் 130 கிலோமீற்றர் வேகத்தில் குறித்த சூறாவளி காற்று வீசியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சூறாவளியினால், டெக்சாஸ் மாகாணத்தின் ஏஞ்சலினா கவுண்டி, அல்டோ, மிச்சிபிசியின் மெனாரே மற்றும் அலபாமாவின் பேர்மிங்காம் ஆகிய நகரங்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு காற்றுடன் மழையும் பெய்வதால் அப்பகுதியில் உள்ள  கட்டிடங்கள், வீடுகள் என்பன முற்றாக சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.