லண்டன் விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் விசாரணைகளின் பின் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக லண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நால்வரும் கடந்த புதன்கிழமை(10.04.209) சர்வதேச விமானம் ஒன்றின் மூலம் லண்டனின் லூடன் விமான நிலையத்தை சென்றடைந்தபோது பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த நால்வரும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் லண்டன் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த நால்வரிடமும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நால்வரும் த மோர்னிங் ஸ்டார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.