மும்பை அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு ?

Published By: Priyatharshan

15 Apr, 2019 | 02:33 PM
image

ஐ.பி.எல். 12 தொடரின் 31 ஆவது போட்டியில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த ஊரில் வைத்து பெங்களுர் ரோயல் சலன்ஞர்ஸ் அணியை இன்றைய தினம் எதிர்கொள்கின்றது.

இரு அணிகளுக்குமிடையிலான போட்டி இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

மும்பை அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்கும் அதேவேளை, பெங்களுர் அணிக்கு விராட் கோலி தலைமை தாங்குகின்றார்.

இரு அணிகளும் இந்த 12 ஆவது ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதோடு, 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது,

இதேவேளை, பெங்களுர் அணி 7 போட்டிகளில் விளையாடி தொடர்ச்சியான 6 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளது.

இதேவேளை இரு அணிகளும் இதுவரை 24 போட்டிகளில் மோதியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 15 வெற்றிகளையும் பெங்களுர் அணி 9 வெற்றிகளையும் பதிவுசெய்துள்ளன.

முந்தைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா, குயின்டான் டி கொக் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் மும்பை அணி 187 ஓட்டங்களை குவித்தாலும் அந்த போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வி கண்டது. 

ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லரின் (89 ஓட்டங்கள்) அதிரடி ஆட்டம் மும்பை அணியின் வெற்றி வாய்ப்புக்கு முட்டுக்கட்டை போட்டது. 

கடந்த போட்டியில் களத்தடுப்பு செய்கையில் தோள்பட்டையில் காயம் அடைந்த மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக லசித் மலிங்க இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியாக 6 லீக் போட்டிகளில் தோல்வியை சந்தித்த பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில்  8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. 

அந்த போட்டியில் விராட்கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் அரைச்சதம் அடித்தனர். அவர்கள் இருவரையும் நம்பி தான் அந்த அணி அதிகம் இருக்கிறது எனலாம். யுஸ்வேந்திர சாஹல் (11 விக்கெட்) சிறப்பாக பந்து வீசி வருகிறார். இருப்பினும் அவருக்கு அணியின் சக பந்து வீச்சாளர்கள் ஆதரவு தேவையானதாகும்.

பெங்களூருவுக்கு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 

அந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், தனது வெற்றி உத்வேகத்தை தொடர பெங்களூரு அணி எல்லா வகையிலும் முயலும். அத்துடன் இனிவரும் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் பெங்களூரு அணி ‘பிளே–ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் வெற்றிக்காக அந்த அணி கடுமையாக போராடும். அதேநேரத்தில் மும்பை அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப தனது முழு வேகத்தையும் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58