தபுத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அந்தர வெவ, எப்பாவெல சந்திக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14,04,2019) இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தபுத்தேகம, இகிரிவெவ வர்ணகுலசூரிய அசேல மதுசங்க என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று நண்பகல் வேளை, கல்நேவ பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் உள்ள மின்சாரக் கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த, மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற குறித்த இளைஞனை, அங்கிருந்தவர்களை தபுத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

 போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.