சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘கனா’ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் இரண்டாவது படமான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டுஓடு ராஜா’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

இதில் தொலைக்காட்சி நடிக ரியோ ராஜ் கதையின் நாயகனாக அறிமுகமாக, இணைய திரை பிரபலம் விக்னேஷ் காந்த் கொமடியனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் விமான பணிப்பெண்ணான ஷ்ரீன் காஞ்ச்வாலா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ராஜ்மோகன், ராதாரவி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள், இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கியிருக்கிறார். படத்தைப்பற்றி அவர் பேசுகையில்.“ நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ முழு நீள  பொழுதுபோக்கு சித்திரம். இதில் 70 சதவீதம் கொமடி உள்ளது. விரைவில் இந்த படத்தின் வெளியீடு திகதி அறிவிக்கப்படும்.’ என்றார்.

வெளியிடப்பட்டிருக்கும் ஃபர்ஸ்ட் லுக்கில் ஹீரோ ரியோ ராஜும் , கொமடியன் விக்னேஷ் காந்தும் ஏராளமான தொலைக்காட்சிப் பெட்டிகளில் இடையே செய்திகளை உருவாக்குபவராக இடம் பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.