பெறுமதிவாந்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட நான்கு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் இருந்த குறித்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரையே பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இரண்டரைக் கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரிலேயே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.