அவுஸ்திரேலியாவிலுள்ள இரவு விடுதி அருகே இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 4 பேரில் ஒருவர் உயிரிழந்தார். 

அவுஸ்திரேலிய தலைநகர் மெல்போர்ன் நகருக்குட்பட்ட பிரஹான் பகுதியில் உள்ள இரவு விடுதியொன்றின் வாசலில் 14 ஆம் திகதி அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச சம்பவத்திற்கு எவ்வதி அமைப்புக்களோ தனி நபர்களே இதுவரை பொறுப்புக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 1996 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் போர்ட் ஆர்த்தர் பகுதியில் ஒருவர் நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் இடம்பெற்ற 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.