நாட்டுமக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய அறைகூவலொன்றை விடுத்துள்ளார்.

நாளையதினம் அனைத்து இலங்கையர்களும் மரக்கன்றொன்றை நாட்டுமாறு ஜனாதிபதி பகிரங்கமாக அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மரக்கன்றொன்றை நாட்டி சுற்றாடலுக்கான பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், இவ்வருட சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளில் மரம் நடும் நிகழ்வும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக இணைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மர நடுகைக்கான சுப நேரமாக இன்று ஏப்ரல் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.17 மணிக்கு கிழக்குத் திசையை நோக்கி இந்த மரக்கன்றை நடுவது நல்லாதாகும்.

இந்நிலையிலேயே இந்த சுப நேரத்தில் மரக்கன்றொன்றை நட்டு எதிர்கால தலைமுறைக்கும் சுற்றாடலுக்கும் பிரஜைகள் என்ற தமது பொறுப்பினை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.