தடைவிதிக்கப்பட்ட வோர்ணர், ஸ்மித் அவுஸ்திரேலியா உலகக்கிண்ண குழுவில் ! விபரங்கள் இதோ !

Published By: Priyatharshan

15 Apr, 2019 | 05:37 PM
image

போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் அதிரடி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்ணர் ஆகியோரை உள்ளடக்கிய உலகக்கிண்ண அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 15 பேர் கொண்ட வீரர்களின் பெயர் விபரங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த குழுவில் டேவிட் வோர்ணர் மற்றும் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் ஹாண்ட்ஸ்கொம் மற்றும் ஹஸில்வூட் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்கவில்லை.

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் கேப்டவுனில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்காக டேவிட் வோர்ணர் மற்றும் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் மீது ஐ.சி.சி. போட்டித் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் 15 பேர் கொண்ட 2019 ஆண்டுக்கான உலக்கிண்ண குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேரடங்கிய அவுஸ்திரேலிய குழாம் விபரங்கள் வருமாறு,

அவுஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பிஞ் தலைமை தாங்குகின்றார், அவருடன் டேவிட் வோர்ணர், ஸ்டீபன் ஸ்மித், உஷ்மன் கவாஜா, ஷோர்ன் மார்ஷ், கிளன் மெக்ஷ்வெல், மார்க்கஸ் ஸ்டெய்னிஸ், விக்கெட் காப்பாளராக அலக்ஸ் கேரி, பட் கெம்மின்ஸ், மிட்சல் ஸ்ராக், ஜெயி ரிச்சட்சன், நதன் குல்ட்லர் நில், ஜேசன் பிஹர்ன்டோர்ப், அடம் ஷம்பா, நதன் லின் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

12-வது உலகக்கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் எதிர்வரும் மே 30 ஆம் திகதி முதல் ஜூலை 14 ஆம் திகதி வரை நடக்கிறது. 

இதில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. 

இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்றையதினம் அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய அணி வீரர்கள் இன்று அறிவிக்கப்படுவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணி வீரர்கள் குறித்து எதுவும் வெளிவராத நிலையில், அஞ்சலோ மெத்தியூஸிடம் உலகக் கிண்ண அணிக்கு தலைமை தாங்குமாறு கேட்கப்பட்டதாகவும் அதனை மெத்தியூஸ் நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

எவ்வாறாயினும் இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வேண்டிய நிலையுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41