தாஹிர், ரெய்னா அபாரம் ; கொல்கொத்தாவை வீழ்த்தியது சென்னை

Published By: Priyatharshan

14 Apr, 2019 | 09:36 PM
image

பந்துவீச்சில் தாஹிர் மிரட்ட, துடுப்பாட்டத்தில் சுரேஷ் ரெய்னா மிரட்ட 5 விக்கெட்டுகளால் கொல்கொத்தாவில் வைத்து நைட்ரைடர்ஸ் அணியை வெற்றிகொண்டது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி.

ஐ.பி.எல். 12 தொடரின் 29 ஆவது போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்துள்ள சமபலம் பொருந்திய சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் ஒன்றையொன்று இன்று கொல்கொத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் மோதிக்கொண்டன.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது.

கொல்கொத்தா அணி சார்பில் சுனில் நரேன் 2 ஓட்டங்களுடனும்  நிதிஷ் ரானா 21  ஒட்டங்களுடனும் ரொபின் உத்தப்பா ஓட்டம் எதுவும் எடுக்காமலும், தினேஷ் கார்த்திக் 18 ஓட்டங்களுடனும் ஆண்ட்ரு ரசல் 10 ஓட்டங்களுடனும் வெளியேறினர். 

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடி அரைச் சதமடித்த கிறிஸ் லின் 51 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 82 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 161 ஓட்டங்களை  எடுத்தது.

சென்னை அணி சார்பாக பந்து வீச்சில் மிரட்டிய இம்ரான் தாஹிர் 27 ஓட்டங்களைக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் பதிலுக்கு 162 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

சென்னை அணி சார்பில் வொட்சன் 6 ஓட்டங்களுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். டு பிளசிஸ் 24 ஓட்டங்களுடனும் அம்பதி ராயுடு 5 ஓட்டங்களுடனும்  கேதார் ஜாதவ் 20 ஓட்டங்களுடனும் தோனி 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடி அரை சதமடித்தார்.

 சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஜடேஜா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 17 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

கொல்கொத்தா அணி சார்பாக பந்து வீச்சில் நரைன் மற்றும் சவ்லா ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக சென்னை அணியின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இம்ரான் தாஹிர் தெரிவுசெய்யப்பட்டார்.

இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 2 புள்ளிகளைப்பெற்ற சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளைப்பெற்று முதலிடத்திலுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09