இளங்கைதிகள் சீர்திருத்த மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

Published By: Priyatharshan

13 Apr, 2019 | 09:49 PM
image

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (13.04.2019) பிற்பகல் நீர்கொழும்பு தளுபொதவிலுள்ள இளங்கைதிகள் சீர்திருத்த மத்திய நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இளங்குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, அங்குள்ள இளைஞர்களுடன் சுமூக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

தமது வாழ்க்கை கதைகள் பற்றியும் தாம் இழைத்த தவறுகள் பற்றியும் சில இளைஞர்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டதுடன், ஜனாதிபதியும் அவற்றை செவிமடுத்தார்.

சிறிய குற்றங்களை புரிந்துள்ள இளங்குற்றவாளிகளை வினைத்திறனாக புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் பாரிய குற்றவாளிகளாக மாறுவதனை தவிர்த்து சமூகத்தில் நற்பிரஜைகளாக மாறுவதற்கு இந்த நிலையத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இளைஞர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவதை தவிர்த்து, அவர்களிடத்தில் ஆன்மீக அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் நற்பிரஜைகளாக வாழ்வது பற்றிய தெளிவை வழங்குவதற்கும் அவர்களுக்கு தொடர்ச்சியாக அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அந்நிலைய அதிகாரிகளுக்கு விளக்கினார்.

மேலும் அவ் இளைஞர்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேம்படுத்துகின்ற நிகழ்ச்சித்திட்டங்களின் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதனைத்தொடர்ந்து அந்நிலையத்தின் நலன்பேணல் நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, புனர்வாழ்வளிக்கப்படும் அனைத்து இளைஞர்களுக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38