பட்லரின் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கோட்டையான மும்மை வான்கடே மைதானத்தில் 3 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுகளால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

ஐ.பி.எல். 12 தொடரின் 27 போட்டியில் முன்னாள் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் வைத்து ராஜஸ்தான் ரோயல்ஸை இன்று எதிர்கொண்டது.

இன்றைய போட்டி மும்மை வான்கடே மைதானத்தில் பகலிரவுப்போட்டியாக இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கயி மும்மை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் குயின்டன் டீ கொக் அபாரமாக துடுப்பெடுத்தாடி 81 ஓட்டங்களையும் அணித் தலைவர் ரோகித் சர்மா 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக அர்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 20 ஓவர்களில் 188 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஜோஸ் பட்லரின் அதிரடியான ஆட்டத்தின் உதவியுடன் 3 பந்துகள் மீதமிருக்க வெற்றியிலக்கை அடைந்து 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக 89 ஓட்டங்களையும் ரஹானே 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் சார்பில் பந்துவீச்சில் குர்னல் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் தெரிவுசெய்யப்பட்டார்.