எம்.எம்.மின்ஹாஜ்

சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பில் பிரதேச மக்களிடையே அதிருப்தி இருந்தாலும் நாட்டின் மின் பற்றாகுறையை பூர்த்தி செய்வதற்காக குறித்த திட்டத்தை நிறைவேற்றுவோம். இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக உள்ளோம் என மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க துறை பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.

சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை மக்கள் மீது திணிக்கப்போவதில்லை. அவர்களின் பிரச்சினை செவிமடுத்து உரிய முறையில் திட்டத்தை முன்னெடுத்து செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின்சக்தி மற்றும் புதுபிக்கதக்க சக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.