(ஆர்.விதுஷா)

கொழும்பில்  அமைந்துள்ள  தனியார்  வைத்தியசாலையின் 8 ஆவது   மாடியிலிருந்து  பாய்ந்து  பெண்ணெருவர் தற்கொலை செய்து  கொண்டுள்ளதாக  பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது. 

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை முற்பகல் 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த  தனியார் வைத்தியசாலையின் ஊழியராக கடமையாற்றும்  பெண்ணெருவரே  இவ்வாறு  தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இதேவேளை,  உயிரிழந்தவரின் சடலம் தொடர்பிலான  பிரேதபரிசோதனைகள்   நேற்று வியாழக்கிழமை கொழும்பு  தேசிய வைத்தியசாலையில்  மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.